ஹேப்பி ஹோலி பல்டி மாமா..... நிதிஷ்குமாரை கலாய்த்து கொண்டாடிய லாலு பிரசாத் யாதவ் மகன்
இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் கடந்த 14ஆம் தேதி ஹோலி பண்டிகை களை கட்டியது. ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசி ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஆனால் ஹோலி பண்டிகையின் போது சில அதிர்ச்சிதக்க சம்பவங்களும் அரங்கேறியது.
இது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடினார்.
அப்போது தன்னுடைய தந்தையை போன்று ஒருவருக்கொருவர் உடைகளை கிழித்துக்கொண்டு ஹோலி பண்டிகை கொண்டாடினர். அதோடு தன் ஆதரவாளர்களின் உடைகளை கிழித்து விட்டு வீட்டின் அருகே ஸ்கூட்டி ஓட்டியபடி ஹேப்பி ஹோலி பல்டி மாமா என நிதிஷ்குமாரை கலாய்த்தார். அதுமட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரரை மிரட்டி இடுப்பை ஆட்டி நடனம் ஆட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்.
ஒருவேளை இடுப்பை ஆட்டி நடனமாடாவிட்டால் சஸ்பெண்ட் செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதனால் அந்த போலீஸ்காரர் கையை உயர்த்தி லேசாக டான்ஸ் ஆடுகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது.
No comments