திருவள்ளூர்: முடங்கிய எலக்ட்ரீசியன்..... நண்பனின் வாழ்க்கையை ஒளிர செய்த எலக்ட்ரீசியன் நண்பர்கள்

 


திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஜெய்குமார்.அவர் இன்ஸ்டாகிராமில் எலக்ட்ரீசியன் வேலை சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவர் "தமிழ்நாடு எலக்ட்ரிஷன் மற்றும் பிளம்பர் நண்பர்கள்" என்ற  வாட்ஸ் அப் தளத்தை நடத்தி வருகிறார்.இந்நிலையில்தான் இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் கமெண்ட் செக்ஷனில் திருச்சியை சேர்ந்த பாண்டி என்பவர் உதவி கேட்டுள்ளார்.

பாண்டி  எலக்ட்ரீஷினாக  சில ஆண்டுகளுக்கு முன்பு துணையாற்றி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது  விபத்தில் சிக்கி  கால் பறிபோனது.இதை அறிந்த கடம்பத்தூர் எலக்ட்ரிஷன் ஜெயக்குமார் அவருக்கு எவ்வாறு உதவலாம் என்று தமிழ்நாடு எலக்ட்ரிஷன் மற்றும் பிளம்பர் நண்பர்கள் குழுவில் பதிவு செய்திருந்தார்.

அவரின் பதிவை  வைத்து திருச்சியில் வசிக்கும் தமிழ்நாடு எலக்ட்ரிஷன் மற்றும் பிளம்பர் நண்பர் குழுவில் உள்ள லட்சுமணன்  நேரில் சென்று பார்க்குமாறு கேட்டு இருக்கிறார். 

எனவே லட்சுமணன் அவர்கள் நேரில் சென்று பார்த்து பாண்டியின் குடும்பத்திற்கு நிலையான வருமானம் இல்லாமல் தவித்து வருவதை உறுதி செய்த அவர்  தையல் மிஷன் வாங்கி தர முடிவு செய்தனர்.தமிழ்நாடு எலக்ட்ரிஷன் மற்றும் பிளம்பர் நண்பர்கள் குழு உறுப்பினர்களிடமிருந்து, பணம் வசூல் செய்து அவருக்கு தையல் மிஷின் வாங்கி கொடுத்து வாழ்க்கையில் ஒளியேற்றினார்கள்.

யூடியூப்  கமெண்ட்  செக்ஷனில் உதவி கேட்ட  எலக்ட்ரீஷனுக்கு எலக்ட்ரீசியன் நண்பர்கள் ஒன்றிணைந்து தையல் மெஷின் வாங்கி கொடுத்து உதவி செய்திருப்பது நிகழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.

Post a Comment

0 Comments