• Breaking News

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சோழவரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்

     


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆண்டார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட போரக்ஸ் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வசேகரன் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ், கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

      இதில் இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் 500பேருக்கு பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

     இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன் மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன், அழைத்த தலைவர் சிறுவாபுரி. ரமேஷ் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் மெரட்டூர் ஜானகிராமன்,வல்லூர் தமிழரசு இளைஞர் அணி கதிரவன்,உள்ளிட்ட திமுக  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments