• Breaking News

    அழைப்பு விடுத்தும் வரவில்லை..... நடிகை ராஷ்மிகாவிற்கு மிரட்டல் விடுத்த எம்எல்ஏ

     


    கர்நாடக அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பாக 16 வது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவானது தொடங்கியுள்ளது. கடந்த இரண்டாம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடக்க விழாவில் பெரும்பாலான கன்னட நடிகர், நடிகைகள் யாருமே பங்கேற்கவில்லை. இதனையடுத்து சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு வரும்போது அவர்களை பார்த்துக்கொள்கிறேன் என்று துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் மிரட்டும் தோனியில் பேசியிருந்தார்.

    இதற்கிடையில் நடிகை ராஷ்மிகா இந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்ததால் காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கடுமையாக அவரை சாடியுள்ளார். அதாவது, “10, 12 முறை அழைப்பு விடுத்தும் திரைப்பட விழாவில் பங்கேற்க நேரமில்லை என்று கூறிய ராஷ்மிகா மந்தனாவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், கன்னடா மொழி, சினிமா, கலாச்சாரத்தை புறக்கணித்த அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    No comments