திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக சார்பில் தென்னிந்திய அளவில் இரண்டு நாள் மாபெரும் பெண்கள் கபடி போட்டியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் .ராஜா தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் காமராஜ் ஆகியோர் போட்டினை துவக்கி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் உள்ள காமராஜ்புரம் விளையாட்டு மைதானத்தில் திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு செம்பாக்கம் பகுதி திமுக சார்பில் தென்னிந்திய அளவில் இரண்டு நாள் மாபெரும் பெண்கள் கபடி போட்டி செம்பாக்கம் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் கேரளா ஆந்திரா , கர்நாடகா மைசூர் போன்ற பல்வேறு மாநிலத்திலிருந்து 40 அணியினர் பங்கு பெற்று போட்டியில் விளையாடுகின்றனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா , தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி போட்டியை துவக்கி வைத்தனர்.
இதில் செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி செயலாளர் மு.வேல்முருகன், மாமன்ற உறுப்பினர்கள், கபடி குழு உறுப்பினர், திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments