தென்காசி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி நலதிட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்
மேலமெஞ்ஞானபுரத்தில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி நல உதவிகள் மற்றும் இனிப்புகளை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி நல உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா மேலமெஞ்ஞானபுரத்தில் நடைபெற்றது. கிளைச்செயலாளர் இஸ்ரவேல் தலைமை வகித்தார். ஒன்றிய பிரதிநிதி பவுல்ராஜ், பொறியாளர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் ரவிக்குமார் தேவதாஸ், சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் எட்வின், ராஜா சிங் முன்னிலை வகித்தனர் ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ஜெபமலர் வரவேற்று பேசினார்.
முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, நல உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பேசினார். திராவிடர் கழக மண்டல தலைவர் டேவிட், ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய துணைச் செயலாளர் டால்டன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் இட்லி செல்வன், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி (எ) கண்ணன், கிளை செயலாளர் அருள்ராஜ், தொமுச தீர்மான குழு மின்வாரிய உறுப்பினர் பெத்தேல் ராஜ், செல்வன்,சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
No comments