• Breaking News

    கடையநல்லூர் தொழில்நுட்ப கல்லூரியில் சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டும்..... அமைச்சரிடம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை


    கடையநல்லூர் தொழில்நுட்ப கல்லூரியில் சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டும் என அமைச்சர் கணேசனிடம், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன்,  கடையநல்லூர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மீனாட்சி தன்னிடம் அளித்த மனுவில் அடிப்படையில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூரில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி கடந்த 2021ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது, இக்கல்லூpயில் சுமார் 344 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 40 பேராசிரியர்கள் பணியாற்றுகினற்னர். இக்கல்லூரி சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

    இக்கல்லூரியை சுற்றி மலைகளும்,காடுகளும் உள்ளது  இதனால் காட்டில் உள்ள காட்டு பன்றிகள், மிளா, முள்ளம் பன்றிகள், மான் போன்ற  வன விலங்குகள் மற்றும் கொடிய விஷபாம்புகள் அடிக்கடி கல்லூரி வளாகத்திற்குள் வந்து விடுகிறது. இதனால் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

    எனவே இக்கல்லூரிக்கு 600 மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுச்சுவர் அமைத்திட N;வண்டும். மேலும் கல்லூரி செல்லும் சாலை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மோசமான நிலையில் உள்ளது. மழை காலங்களில் கல்லூரிக்கு செல்ல மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே இச்சாலையையும் சீரமைத்து தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    அப்போது மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    No comments