கள்ளக்குறிச்சி: சாக்குப்பையில் குப்பைகளை அள்ளி சென்ற பள்ளி மாணவர்கள்..... கொந்தளித்த பெற்றோர்கள்

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் வளாகத்தில் சேகரித்த குப்பைகளை சாக்குப்பையில் சுமந்து ஒரு பகுதியில் கொட்டினர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

அந்த பள்ளி இருக்கும் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆபத்தான முறையில் சாக்குப்பையில் குப்பைகளை இருபுறமும் பிடித்தபடி மாணவர்கள் சாலைக்கு அருகே சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தின் செயலை கண்டித்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments