சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 15 தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள கல்லூரியில் சோதனை நடத்தினார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(27), நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜெகர் சாதிக்(24) மற்றும் செஞ்சி அனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராம் சந்தர்(34) ஆகிய மூவரும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனால் 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தம்பெட்டமின் மற்றும் 26 போதை ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உதயகுமார்(27) என்பவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments