• Breaking News

    தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் அறங்காவலர்கள் நியமனம்..... திமுக மாவட்ட பொறுப்பாளரிடம் வாழ்த்து பெற்றனர்.....


    தென்காசி  காசி விஸ்வநாத சுவாமி கோவில் அறங்காவலர்கள் நியமனம் செய்யபபட்டவர்கள் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனிடம் வாழ்த்து பெற்றனர்.

    தென்காசி காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறங்காவலர்களாக  இலத்தூர் சித்ராபுரம் மூக்கன், கல்லூரணி முருகேசன், கீழசுரண்டை புவிதா, வல்லம் பாலகிருஷ்ணன், தென்காசி ஷீலா குமார், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து, புதிய அறங்காவலர்கள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, தென்காசி ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட மகளிர் தொண்டரணி சமூக வலைதள பொறுப்பாளர் சோபனா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    No comments