தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை..... பிரபல பின்னணி பாடகி விளக்கம்

 


பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு  மயங்கி விழுந்து கிடந்தார். இதனையடுத்து மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்தது மருத்துவ பரிசோதனை தெரிய வந்தது. பின்னர் அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியோடு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கண் விழித்த அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றார்கள். அப்போது அவர் கூறியதாவது, “தூக்கமின்மை காரணமாக அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன். மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவைவிட அதிக தூக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்துக் கொண்டதால் தான் வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments