துபாயில் அன்னபூர்ணா உணவகத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி


துபாய்,  ஐக்கிய அரபு அமீரக துபாயில்  தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க  இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் தேரா  பகுதியில் உள்ள அன்னபூர்ணா  உணவகத்தில் உள்ள நிகழ்ச்சி அரங்கில் சிறப்பாக   நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தேமுதிக  அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில்  அவைத்தலைவர், காமராஜ், பொருளாளர் வாகை சதீஷ்குமார், துணைச் செயலாளர் ஷாஹுல் ஹமீது, துணைச் செயலாளர் அம்ஜத்அலி, செல்வம் சேகர்,  கார்த்திகேயன் சிவக்குமார் மகளிர் அணி செயலாளர் வகிதா பானு, இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெகன் ராஜ், சமூக வலைதள அணி செயலாளர் கேப்டன் சிவா, நைனா முஹம்மத் உள்ளிட்டோர்  முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், TEPA அமைப்பின் நிறுவனர் பால் பிரபாகர், அமீரக தமிழ் சங்க தலைவி டாக்டர் ஷீலு, முத்தமிழ் சங்கம்  நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது, தங்கதுரை. பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா,   தவேக நிர்வாகி  காரல் மார்க்ஸ், துபாய் தர்பார் கபீர், மீடியா தாஹிர், மீடியா ரஷீத், தேசிய தமிழ்  நாளிதழ் தினகுரல் வளைகுடா  தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான   நஜீம் மரிக்கா, உலக தமிழ் பேரவை சாதிக், பாமக நிர்வாகி மகேஷ், மதிமுக துரை, தொழிலதிபர் ராபின்ஷன்,  தொழிலதிபர்  உஸ்மான் அலி,  இன்ஷடா புகழ் பிரியா சரவணன் குடும்பத்தார், ஏசியா புக் சாதனை தமிழ் பாடகி மிருதுளா, டிக்டாக்  மீனு, பச்சமன்னுமீடியா நாசர், திமுக நிர்வாகி பொதக்குடி தாரிக் உள்ளிட்ட   ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக கழகச் பொதுச் செயலாளர் பிரேமலதாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதாமாக அமீரக செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் கேக்குவெட்டி கொண்டாடி நலமோடு வாழ பிரார்த்தனை செய்து கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471, 6382211592 .

Post a Comment

0 Comments