தோட்ட பகுதியில் சிதறி கிடந்த பெண்ணின் உடல்.... போலீசார் விசாரணை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள், இந்த சோகம் நிறைந்த காட்சியை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் உடலை ஆய்வு செய்தனர்.
அவரது உடல் பல இடங்களில் சிதறிக் கிடந்ததால், இது வனவிலங்குகளின் தாக்குதலா? அல்லது வேறு எந்த காரணத்தால் நடந்ததா? என்பதில் போலீசார் சந்தேகமடைந்தனர்.விசாரணையில், இறந்த பெண் அஞ்சலை என்பவர் என்றும், சில நாட்களாக காணாமல் போயிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரை தாக்கியது புலியா? அல்லது சிறுத்தையா? என்பதை உறுதி செய்ய, வனத்துறையினர் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments