முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் சகோதரர் கைது
வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செக் மோசடி வழக்கில் சேவாக் சகோதர் வினோத் சேவாக் கைதாகி இருக்கிறார். ஜல்தா புட் மற்றும் பெவரேஜஸ் நிறுவனத்தை வினோத் சேவாக், விஷ்ணு மிட்டல் மற்றும் சுதீர் மல்ஹோத்ரா ஆகிய மூவரும் நடத்தி, இயக்குநர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் மூவரும் , ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மோகன் என்பவரின் ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் இருந்து தங்கள் நிறுவனத்திற்காக பொருட்கள் வாங்கி இருக்கின்றனர். அதற்காக ரூ.7 கோடி செக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த செக்கை வங்கியில் கிருஷ்ணா மோசன் டெபாசிட் செய்த போது, அந்த செக் பவுன்ஸாகி இருக்கிறது.
இதற்கான காரணம் குறித்து அறிகையில், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் கிருஷ்ணா மோகன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த விசாரணைக்கு அவர்கள் மூவரும் ஆஜாராகாத நிலையில், 2023ஆம் ஆண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் வீரேந்தர் சேவாக்கின் சகோதர் வினோத் சேவாக் சண்டிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments