நாகை மாவட்டம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் "ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் களபணி மேற்கொண்டு வருகின்றனர் .அதன் ஒரு பகுதியாக திருக்குவளை தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் "கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு"( மக்கள் பங்கேற்பு முறையில் ஊரக வளங்களை கண்டறிதல்) எனும் முறையைக் கொண்டு திருக்குவளை கிராமத்தின் வளங்களை கண்டறிந்தனர். சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்களின் உதவியோடும் கிராமத்தின் வளங்களையும், தேவைகளையும் வண்ணப்பொடிகள் கொண்டு வரைபடமாக வரைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் வை. பாலசுப்பிரமணியன், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை மாணவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
0 Comments