• Breaking News

    கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது..... சிறப்பு விருந்தினராக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு.....


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம், கேசவன் தலைமை வைத்தார் முன்னிலை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள். எம் நாகமணி ஆர், ரமேஷ் அறிவழகன் எஸ், ரமேஷ் முன்னிலை வைத்தனர்.


     நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராசன் கலந்துகொண்டு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் ஊக்கத்தொகை  வழங்கி பாராட்டினார். விளையாட்டு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்.

     இந்நிகழ்ச்சியில்  கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற தலைவர் சகிலா அறிவழகன் பாலசுப்பிரமணியம் பள்ளி தலைமை ஆசிரியர் லதா உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன் எம் வசந்தா பேரூராட்சி வார்டு உறுப்பினர் கருணாகரன். சட்ட ஆலோசகர் தீனதயாளன் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    No comments