கோபிசெட்டிபாளையம் நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளை யத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோபி நகர திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சேலம் அன்னபூரணா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவம், எலும்பு மூட்டுத் தேய்மானம் மற்றும் கண் பரிசோதனை முகாம் கோபி ல.கள்ளிப்பட்டி பிரிவில் எல்.ஐ.சி அலுவலகம் எதிரில் உள்ள ஸ்ரீ நவலடி மஹால் திருமண மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளரும் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் என்.நல்லசிவம் குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணை அமைப்பாளர் கள்ளிப்பட்டி மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி.குமணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே.கே.செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஏ.பரமேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஜி.டி.அய்யாசாமி, ஏ.சவுகத் அலி, நகர அவைத்தலைவர் எஸ்.சுரேஷ், நகரத் துணைச் செயலாளர் கே.ராஜாமணி, நித்தியா மெய்யழகன், நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய் கருப்புசாமி, நகர இலக்கிய அணி அமைப்பாளர் டி. பிரபாகரன், நகர பொருளாளர் ஆர்.சக்திவேல், நகர மகளிர் அணி அமைப்பாளர் எஸ்.மகேஸ்வரி, நகர வர்த்தக அணி அமைப்பாளர் எம்.முத்துவீரன், நகரத் தொழிலாளர் அணி அமைப்பாளர் எம்.ஆர்.செந்தில், நகர்மன்ற உறுப்பினர் பி.குமார சீனிவாசன்,வார்டு செயலாளர்கள் வி. ஸ்ரீதர், வி.வெங்கடேசன், ஏ.விஸ்வநாதன் எம்.சரவணன், ஆர்.தங்கராஜ் எம்.கிருஷ்ணன், எஸ்.ரவிச்சந்திரன், ஏ.மோகன், ஏ.சக்திவேல், ஜி.எம்.ஈஸ்வரன், ஜி.எஸ்.ஜோசப், என்.ராஜா, ஜி.டி.பூபதி, ஜி.எம்.சாதிக் பாஷா, எம்.கே.முருகேசன், எம். சண்முகம், கே.எம்.முருகநாதன், தொ.மு.ச செயலாளர் கே.எஸ்.சுதாகர், மாநில, மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி உறுப்பினர்கள், கழக சார்பு அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments