• Breaking News

    சென்னை: காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை..... தியேட்டர் கேண்டீன் உரிமம் ரத்து

     


    சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்பானம் காலாவதியாகி இருப்பதை குற்றம் சாட்டி கேண்டீன் நிர்வாகத்தினருடன் திவ்யா என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று குளிர்பானங்களை சோதனை செய்தனர்.

    அப்போது சில குளிர்பான பாட்டில்களில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான உணவு  பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த கேண்டீன் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சென்னை முழுவதும் இருக்கும் திரையரங்குகளில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    No comments