• Breaking News

    நாகை அருகே வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்த தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல்


    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம்  கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் 26 பேருக்கு முதல்வர் வருகையின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கிட வேண்டுமென  மாவட்ட ஆட்சியரிடம் நேற்று முன்தினம் (மார்ச் 5) தவெக சார்பில் மனு அளித்துள்ளனர்‌.

    இந்நிலையில்,தவெக சார்பில் மனு அளித்ததை கண்டித்து, திமுகவினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ஆட்சியரிடம் மனு கொடுத்து பேட்டி அளித்த பெண் உட்பட  4பேரை  மானபங்கபடுத்தி தகாத வார்த்தைகள் கூறி திமுக பிரமுகர் மற்றும்  அவருடைய ஆதரவாளர்கள்‌ சிலர் சேர்ந்து தாக்கியதாக  கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் அந்த  பகுதியைச் சேர்ந்த வெண்மணி,பரமேஸ்வரி,சித்ரா,ராகிணி ஆகிய நான்கு பேரும் மற்றும் மற்றொரு  தரப்பைச்  சேர்ந்த ஒருவர் என 5பேர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தகவல் அறிந்து  தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில், கட்சியினர் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனையில் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியது.

    மேலும்  இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரணை செய்ய கீழையூர் போலீசார், மருத்துவமனைக்கு வந்த நிலையில், ஏற்கனவே புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உரிய நடவடிக்கை இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

    No comments