• Breaking News

    இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல்.... நாளை வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய்

     


    தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அக்கட்சி வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமனம் செய்து வருகிறார். இதுவரை மொத்தம் 95 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மீதமுள்ள மாவட்டங்களுக்கான அறிவிப்பை நாளை வெளியிட உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நாளை அகட்சியின் தலைவர் வெளியிடுகிறார்.

    No comments