நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பாக தாம்பரம் மாநகராட்சி உள்ள நன்மங்கலம் ஏரியை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்று நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இன்று செம்பாக்கம் சீயோன் பள்ளி வளாகத்தில் காலை 7 மணி அளவில்  நன்மங்கலம் பாதுகாப்பு குழு தலைமையில் நடைப்பயணத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கொடி அசைத்து துவக்கி வைத்தனர் இதில் புனித தோமையர் மலை ஒன்றிய தலைவர் சங்கீதாபாரதி, நன்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் லயன் கிரி, துணைத் தலைவர் கார்த்திகேயன், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நல சங்கங்கள், நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக நன்மங்கலம் ஏரி மற்றும் அதனை  சுற்றியுள்ள  குடியிருப்பு பகுதி வழியாக மேளதாளம் முழுக்கத்துடன்  ஏரிகளை பாதுகாப்போம் ஏரிகளில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவோம், போன்ற வாசகம் அடங்கிய அட்டைகள் ஏந்தி கொண்டு  கோஷங்கள்  எழுப்பியவாறு பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் சமூக ஆர்வலர் கலந்துகொண்டு ஏரிகளை எப்படி பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள்  நன்மங்கலம் பாதுகாப்பு குழு சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நன்மங்கலம் ஏறிய பாதாள சாக்கடை திட்டத்தை மற்றும் அதை சுற்றியுள்ள ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

Post a Comment

0 Comments