நீட் தேர்வு அச்சம்..... மாணவி தூக்கிட்டு தற்கொலை
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதே போல ராணுவ நர்சிங் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2025-2026-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் ஐந்தாம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 7 ஆகும்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி நீட் தேர்வு எழுத 2-வது ஆண்டாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு அச்சத்தால் ராஜஸ்தானை சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments