• Breaking News

    யூ.கேவை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் சென்னை முதல் கோவா வரை ஆயிரம் கி.மீ துரத்திற்கு ஆட்டோ பேரணி


    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தகள் நல நிதி திரட்டும் விதமாக  ஈடுபட்டுள்ள யூ.கே வை  சேர்ந்த 54 இளம் பெண் தொழிலதிபர்கள் , 18 ஆட்டோக்களில்  சென்னை தாம்பரத்தில் இருந்து கோவா வரை 1000 கி.மீ தூரத்தை 6 நாட்களில் பேரணியாக செல்லவுள்ளனர்.

    இதற்கான ஏற்படுகளை மெட்ராஸ் மிட்டவுன் ரவுண்டு டேபிள்-42 மற்றும் லேடிஸ் சர்கிள்-7  ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட நிலையில் பேரணியாக செல்ல தி சிஸ்டர் ஹூட் அமைப்பை சேர்ந்த யூ.கே வை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்களின் பாதுகாப்பு மற்றும் ஆட்டோ ஓட்டிச்செல்ல அனுமதியும் பெற்று தந்த நிலையில் பேரணியின் போது பாதுகாப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.மகளிர் நலன் மற்றும் சிறுவர்களுக்காக 3 கோடிக்கு நிதி திரட்ட முற்பட்ட நிலை இதுவரை 70 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    No comments