• Breaking News

    அறந்தாங்கி அடுத்த குன்னகுரும்பி கிராமத்தில் ஸ்ரீ ராதா சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமார்த்த திருக்கோயிலில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா குன்னகுரும்பி கிராமத்தில் உள்ள  ஸ்ரீ ராதா சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமார்த்த  திருக்கோயில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக திருக்கல்யாணத்திற்கு சீற் வரிசையாக அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் தலையில் பட்டு சேலை பட்டு வேஷ்டி பழங்கள் மற்றும் இனிப்புகள் பூ மாலைகளை சுமந்தப்படி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் குன்னக்குரும்பி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதங்கள் வழங்கினார்.












    No comments