Tuesday, April 8.
  • Breaking News

    பாஜக கூட கூட்டணி.... எடப்பாடியை எச்சரித்த திருமாவளவன்

     


    தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனை பாஜக உறுதிப்படுத்திய நிலையில் அதிமுக இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார். 

    இது பற்றி அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசியதாவது, சிலர் கூலி வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியை உடைக்க வேலை பார்த்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்று நினைக்கும் நிலையில் முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்தும்.

    தப்பி தவறி கூட பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும். தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புச் சீட்டாக இருக்கிறது. விசிகாவுக்கு எத்தனை சீட்டு கிடைக்கும் 6, 7 சீட்டு கிடைக்குமா என்று. ஆனால் 20 சீட்டுகள் தந்தாலும் நாங்கள் ஆட்சியைப் பிடிக்கப் போவது கிடையாது.

     ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் ஒரு வலுவான சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். மேலும் அடுத்து வரும் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறினார்.

    No comments