இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி இளைஞர்களை மயக்கி கஞ்சா தொழிலில் ஈடுபடுத்திய இளம்பெண்

 


சென்னை திரிசூலம் ரயில்வே கேட் அருகே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அப்பெண்ணை உடனடியாக கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திரிபுரா மாநிலம் உதய்பூரை சேர்ந்த பாயல் தாஸ்  என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. இவர் கடந்த 3 வருடங்களாக சென்னையில் தங்கி இருந்து கஞ்சா கடத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி  இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தேடி காதல் வலைவீசி, அவர்களையும் கஞ்சா வியாபாரிகளாக மாற்றி உள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments