போர் நிறுத்த முயற்சிக்கு உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு புடின் நன்றி

 


கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றதும், போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டார்.போர் நிறுத்தம் தொடர்பாக மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் அமெரிக்கா - உக்ரைன் நாடுகளின் அதிகாரிகள் நடத்திய பேச்சில், 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளதாவது:

முதற்கட்டமாக இந்த முயற்சிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் தான் உக்ரைன் விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்பதற்காக அதிக கவனம் செலுத்தினார். அதுபோல பல நாடுகளின் தலைவர்களும் பாடுபட்டனர். குறிப்பாக, சீன அதிபர், இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் மற்றும் தென் ஆப்ரிக்கா அதிபர் போன்றோரையும் பாராட்ட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து, இந்த தலைவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை பல மணி நேரம் செலவிட்டனர். அவர்களின் உன்னத நோக்கத்தால், இருதரப்பிலும் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் மனித உயிர் பறிபோவதை தடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments