குரோம்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


சென்னை அடுத்த குரோம்பேட்டை  சாஸ்திரி காலனி பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பல்லாவரம் தெற்கு பகுதி தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மமக மாநில துனைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப், தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியின் போது  சி.எல்.சி. சாலையில் ஆர்ச் மற்றும் புதியதாக கட்டபட்ட இரயில்வே சுரங்கபாலம், பேரூந்து நிலையத்திற்கு  மறைந்த காகிதமில்லத் பெயர் சூட்ட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அரசு அனுமதி பெற்றும், மண்டல் குழுத் தலைவர் ஓப்புதலுடன் நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். 

இதில் மாவட்ட செயலாளர் எஸ்.கே.ஜாகிர் உசேன், பகுதி செயலாளர் பெர்னால்டு, மதிமுக நாசர் மாமன்ற உறுப்பினர்கள் புஸிராபானு நாசர், மகேஸ்வரி கார்த்திகேயன், விசிக மாவட்ட செயலாளர் தமிழரசன், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதிரிகள் மற்றும் திமுக, மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments