• Breaking News

    நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதலமைச்சருக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்க வேண்டும்..... மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் பேச்சு


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அவசர செயற்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில். அமைந்துள்ள லீ-ராஜ் கோர்ட்யார்ட் ஹோட்டலில் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் தலைமையில்  நடைபெற்றது.

     இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் மு.கதிரவன், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, எம்.எல்.ரவி, எஸ்.ரமேஷ், பி.வெங்கடாசலபதி, ஏ.வி.ராமமூர்த்தி,  தொகுதி பார்வையாளர்கள் தமிழ் க.அமுதரசன், மாநில நிர்வாகிகள்  கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், ஜி.ஸ்டாலின், ஏ.ஆர்.டி.உதயசூரியன், ஏ.கே.சுரேஷ்,  ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு நம்மும் நாளும் உயிராய் போற்றி வணங்கும் நம்முடைய ஒப்பற்ற தலைவர் தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ஏப்ரல் 19ம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நமது திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி அடுத்த அம்மையார் குப்பம் பகுதிக்கு வருகை தர உள்ளார்.

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் சில இடங்களில் கழகத் தலைவர் அவர்கள் Road show  மக்கள் சந்திப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் சாலையில் இடது புறமா பொது மக்களுக்கு அனைவரும் அணி திரண்டு நின்று உற்சாகம் வரவேற்பு அளித்திட மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் 

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லை தொடங்கி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வரை ஒன்றிய நகர பேரூர் கழகத்தினர்கள் தமது கரங்களில் கழக கொடி வரவேற்பு பதாகைகளை ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தினர்கள் வரவேற்பு அளிக்க வேண்டும்.

    குறிப்பாக கழக நிர்வாகிகள் பேனர் வைப்பது பட்டாசு வெடிப்பது தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என வாசகத்துடன் சேர்த்து கழகத் தலைவர் அவர்களுக்கு வருக வருக என சுவர் விளம்பரங்களை எழுத வேண்டுமென என மாவட்ட கழகச் செயலாளர் தெரிவித்தார்.

     ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மு.மணிபாலன்,  டி.கே.சந்திரசேகர், நா.செல்வசேகரன், ஆ.சத்தியவேல், ஜான்பொன்னுசாமி, ந.பரிமளம், கா.சு.ஜெகதீசன், மு.முரளிதரன், ஜி.ரவிக்குமார், இரா.அறிவழகன், அபிராமி குமரவேல், பி.முத்து, க.சு.தமிழ உதயன், உள்பட மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

    No comments