பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பபட்டு வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி இந்த நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் பெற்ற ஷிவாங்கி, 'டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசே தான் கடவுளடா' ஆகிய படங்களில் நடித்தார்.
இப்போது சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் ஷிவாங்கி, தன்னுடைய காதல் 'பிரேக் அப்' குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்,
''நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், அது பிரேக்கப் ஆகிவிட்டது. இப்போது நான் சிங்கிளாகதான் இருக்கிறேன். அந்த பிரேக்கப் எனக்கு பெரிய மன பலத்தை கொடுத்தது. என்னை நானே பார்த்துகொள்ள கற்றுக்கொண்டேன். அழகான ஆண்கள் ஊர் முழுக்க இருப்பார்கள். நமக்கு அவர்களை பிடிக்கும். ஆனால், அவர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது'' என்றார்.
0 Comments