செம்பாக்கத்தில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் வடக்கு செம்பாக்கம் பகுதி சார்பில் புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் ஒன்றிய மோடி அரசு கொண்டு வரும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் செம்பாக்கம் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் அவர்கள் தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலஷ்மி மதுசூதனன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, கழகத்தின் இளம் பேச்சாளர்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார் உறுதி மொழி ஏற்றினார்கள் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாவட்ட தலைமை குழு உறுப்பினர் அன்பு செழியன், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மாநகர கழக நிர்வாகிகளும் வட்ட கழக நிர்வாகிகளும் பொது மக்களும் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments