• Breaking News

    அறந்தாங்கி அருகே குன்னகுரும்பி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குன்னகுரும்பி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது வட்டார கல்வி அலுவலர் நடராஜன் , மற்றும் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பள்ளியில் சிறப்பாக படித்து தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ,ரம்யா கருணாகரன் முயற்சியில் சீல்டுகள் வழங்கி கௌரவம் செய்தனர்.பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை நடனமாடி  வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் .தலைமை ஆசிரியர் எம் ராஜப்பா மற்றும் ஆசிரியர்கள் மாலதி ,நாஜீனி பேகம் , ராஜராஜேஸ்வரி, கிருஷ்ணவேணி, கார்த்திகா, ஜெயலதா, வாசுகி, சோபா, கலைச்செல்வி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், Avm,சுகுமாரன்,  ராணி ராஜா,SMC உறுப்பினர்கள் மற்றும் PTA உறுப்பினர்கள் கல்வியாளர்  குஞ்சப்பா, மற்றும் பெற்றோர்கள் ,கிராம பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




    No comments