• Breaking News

    அதிமுக ஒன்று சேர்ந்து விடுமோ என திமுகவினருக்கு பயம்..... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

     


    தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக சார்பில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமை வகித்தார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: கேரள மாநிலம் தமிழகத்தில் இருந்து கனிம வளத்தை பெற்றுக் கொண்டு, மருத்துவக் கழிவுகளை இங்கு கொட்டி வருகிறது. ஆனால், தமிழக அரசு இதனைக் கண்டுகொள்வதில்லை. அதிமுகவினர் சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு. அதிமுக ஒன்று சேர்ந்து விடுமோ, பாஜகவுடன் கூட்டணி வைத்து விடுமோ என்ற அச்சத்திலும், பயத்திலும் திமுகவினர் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    No comments