திண்டுக்கல்: அத்திப்பட்டி கிராம காலணி மக்களுக்கு பாஜக நிர்வாகிகள் குடிநீர் வழங்கினர்
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி சிலப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராயர்புறம் காலணியில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் வருவதில்லை எனவும் மற்ற உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் அடிகுழாயும் பழுதடைந்துள்ளது நாங்கள் அத்திப்பட்டியல் வசிப்பது போல் உள்ளது என கிராம மக்கள் கூறியதை அடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாஜக திண்டுக்கல் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கண்ணபிரான், கிளைத் தலைவர் மருதமுத்து ஆகியோர் ஏற்பாட்டில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய தலைவர் ஆனந்தகுமார் ,விவசாய அணி மாவட்ட தலைவர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் முனுசாமி, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் மணவாளன், ராஜேஷ் கண்ணா, உட்பட பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கினர்.
No comments