வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி டயலாக் பேசுகிறார்..... விஜயை எதிர்த்து தான் போட்டி..... சவால் விட்ட பவர் ஸ்டார்

 


தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் பொதுக்குழு கூட்டத்தில் திமுக, பாஜக கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். அவரது பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் கூறியதாவது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து தான் போட்டியிடுவேன்.

எந்த கட்சி அழைத்தாலும் விஜய் எதிர்த்து நிற்பேன். விஜயை நான் ரொம்ப மதிக்கிறேன். ரொம்ப அமைதியாக இருந்தவர் நினைவில் மேடையில் பயங்கரமான டயலாக் வசனம் எல்லாம் பேசுகிறார். முதலில் காலத்திற்கு வாங்க விஜய். அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி டயலாக் பேசுகிறார்.கூட்டத்தை வைத்து எதையுமே கணிக்க முடியாது. எனக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். கட்சி ஆரம்பிக்க முயற்சி எடுத்தேன். ஒரு சில சூழ்நிலையால் அது தள்ளி போனது.

 எனது அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் என்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். நான் கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சிக்கு கூப்பிட்டால் போவேன்.திமுகவில் சேர வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சேருவேன். விஜய் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார்? கொள்கை என்ன? என்பதை சொல்லாமல் திமுக எதிரி என்று சொல்லக்கூடாது. அவர்கள் 50 வருட அனுபவம் உள்ளவர்கள். அவர்களது அனுபவம் இவரது வயது. மேடையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசக்கூடாது.

விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டத்தை பார்த்து எதையுமே கணிக்க முடியாது. அரசியல் வேறு வாக்காளர்கள் வேறு எனக்கும் விஜய்க்கு மேல கூட்டம் இருந்தது. விஜய் களத்தில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை எனக் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments