பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி...... கணவர் கைது
பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்நிலையில் கப்பனாவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளார்கள் .இரண்டு நாட்களாக தான் வீட்டில் இல்லை என்று கல்பனாவின் கணவர் கூறி இருக்கும் நிலையில் அவர் மீது இருக்கும் சந்தேகத்தில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments