• Breaking News

    திருவள்ளூர்: ஆட்டோ மீது கவிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... உயிர் தப்பிய பள்ளிக் குழந்தைகள்


    திருவள்ளூரில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக வரவேற்பு அளிக்கும் வைத்திருந்த 25 அடி ராட்சத பேனர்  போதிய பாதுகாப்பு இல்லாததால் இலேசான மழைக்கே 5 பேனர்களும் கவிழந்தது. பள்ளி மாணவ மாணவிகளுடன் நின்றிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது. பொது மக்கள் அதிர்ச்சி. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.  

    திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க இருப்பதால் அவரை வரவேற்கும் விதமாக திமுகவினர் திருவள்ளூர் மாவட்ட எல்லையிலிருந்து சாலையின் இரு புறமும் திமுக கொடியை கட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மணவாளநகரிலிருந்து திருப்பாச்சூர் வரை 8 கி.மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும்  கொடி கம்பங்களை நட்டு கொடியை கட்டி வருகின்றனர்.  இந்நிலையில்  கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருப்பாச்சூர் வரை 25 அடி உயர ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.  

    வீல் சக்கரம் பொருத்தப்பட்ட போதிய பாதுகாப்பு இல்லாமல் அப்படியே தள்ளி செல்வது போல் அந்த பேனர் அமைக்கப்பட்டிருந்தது. இலேசான காற்று அடித்தாலும் விழக்கூடிய நிலையில் போதிய பாதுகாப்பு இல்லாமல் அப்படியே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில் மாலை திடீரென திருவள்ளூரில் காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர்கள் சாலையின் உள்புறம் கவிழ்ந்தது. 

    இதில் கலெக்டர் அலுவலக வாசலில் வைத்திருந்த பேனர் கவிழ்ந்ததில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ அங்கு நின்றிருந்த போது ராட்சத பேனர் கவிழந்ததால் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் பயத்தில் அதிர்ச்சி அடைந்தன.   சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்புறம் சாய்ந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டது.   அரசின் அலட்சியத்தால் முதல்வரை வரவேற்க வைத்த ராட்சத பேனர்கள் கவிழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தின் உறைந்துள்ளனர்.

    No comments