தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் எஸ்.விஜயகுமார் பிறந்தநள்..... பொன்னேரி அரசு மருத்துவமனையில் தொண்டர்கள் ரத்த தானம்
தமிழக வெற்றிக் கழக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் விஜயகுமார் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பின்னர் விஜயகுமார் 52,வது பிறந்த நாளை ஒட்டி 52,கிலோ கேக் வெட்டியும் பண மாலை அணிவித்தும் சிறப்பித்தனர் பின்னர் கழகத் தொண்டர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பின்னர் அறுசுவை உணவான பிரியாணி வழங்கப்பட்டது இதில் பொன்னேரி நகரம் மீஞ்சூர் ஒன்றியம் சோழவரம் ஒன்றியம் ஆரணி நகரம் ஆகிய பகுதிகளின் கழகத் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர் மாவட்ட செயலாளர் விஜயகுமார் இதுபோன்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பிறந்த நாளை பள்ளி மற்றும் முதியோர் இல்லம் ஆகிய இடங்களில் நடத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொண்டார்.
No comments