கும்மிடிப்பூண்டியில் தவெக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 


திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி, சோழவரம், எல்லாபுரம், மீஞ்சூர், பூண்டி ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தினர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் பங்கேற்று  சிறப்புரை ஆற்றினார்.


அப்போது அவர் பேசுகையில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவரவர் பூத்துகளில் 70புதிய வாக்காளர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், இந்த பணியை அனைவரும் முழுமையாக செய்தால் ஒவ்வொரு தொகுதியிலும் தமிழக வெற்றி கழகத்தினர் வெற்றி பெற்று தமிழக  கழக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியை பிடிக்க வழி ஏற்படும் என்றார்.இந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments