தாம்பரம் தெற்கு பகுதி தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட  தாம்பரம் தெற்கு பகுதி தேமுதிக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பகுதி கழக செயலாளர் கேட்.எம்.தர்மா தலைமையில் தெற்கு பகுதி துணைச் செயலாளர் டி.ஏழுமலை, 63வது வட்டச் செயலாளர் கே.குமார், 63வது வட்டச் அவைத்தலைவர் தேன் என்கின்ற லட்சுமணன், 63வது வட்ட துணைச் செயலாளர் ஏழுமலை ஆகியோர் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் அனகை முருகேசன் மாவட்ட துணைச் செயலாளர் மா.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கழக கொடியேற்றி வைத்து அதனைத் தொடர்ந்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி வெள்ளரிக்காய், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதி பொருளாளர் வி.எஸ்.லோகநாதன், தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் மார்க்கெட் ஞானப்பால், மாவட்ட வழக்கறிஞர் துணைச்செயலாளர்கள் சுஜாதா நந்தினி, அபிநயா, தெற்கு பகுதி துணைச் செயலாளர் தமிழரசி, தெற்கு பகுதி மாவட்ட பிரதிநிதிகள் வீரப்பன்,  பாலமுருகன், தெற்கு பகுதி மகளிர் அணி செயலாளர் டாக்டர் சுமதி, துணைச் செயலாளர்கள் திலகா, ரம்யா, சரசு, வட்டக் கழக செயலாளர்கள் 47வது வட்ட செயலாளர் சந்தோஷ், 46வது வட்ட செயலாளர் காந்தி, 63வது வட்ட நிர்வாகிகள் அசோக்குமார், விஜி, பிரகநாதன், ராஜா 62வது வட்ட நிர்வாகி விக்கி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments