ஆவூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் கல்வி சீர் விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது


மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆவூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் கல்வி சீர் விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா 2029 அன்று பள்ளி வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. K, ஜெய்கார்த்தி பட்டதாரி ஆசிரியர்  வரவேற்பு மற்றும் ஆண்டு அறிக்கை நிகழ்த்தினார்.

 S,குமுதா தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்  V. வினோத்குமார் மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார்.முதலில் எஸ் எம் சி உறுப்பினர்கள் மக்கள் சார்பில் கல்வி சீர் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் படித்த மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.அதன் பின்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி விளையாட்டுகளும் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

கே சண்முகநாதன் பட்டதாரி ஆசிரியர் நன்றியுரை கூறினார். விழாவின் ஏற்பாடுகளை மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆவூர் எஸ் எம் சி உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் தலைமையாசிரியர்கள் உதவி ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments