நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளை கடந்து செயல்படும் இப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது. மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
விளையாட்டு போட்டிகள், கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் சினிமா பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு வண்ணமிகு ஆடைகள் உடுத்தி நடனமாடி அசத்தினர். கரகாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம், எந்திரன் பாடல், வரான் வரான் பூச்சாண்டி பாடல், வடிவேலு காமெடி உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது காண்போரை பரவசமாக்கியது.
கோவில் திருவிழாவிற்கு வருகைதந்தது போல் அரசு பள்ளி ஆண்டுவிழாவிற்கு வருகை தந்த பொது மக்கள் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்கொட்டாமல் கண்டுகளித்தனர்.
இவ்விழாவில் கீழ்வேளூர் வட்டாரக் கல்வி அலுவர் சிவக்குமார், தலைமையாசிரியர் மகாலெட்சுமி, முன்னாள் தலைமையாசரியர்கள் ஜெயக்குமார், பக்கிரிசாமிபள்ளி மேலாண்மை குழு தலைவி மஞ்சு மற்றும் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் , பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி
0 Comments