நடிகர் வடிவேலுவின் இடத்தில் குப்பையை கொட்டும் பேரூராட்சி..... திமுகவின் சொம்புக்கே இந்த நிலமையா என நெட்டிசன் கமெண்ட்
நடிகர் வடிவேலு மனைவி சொந்த ஊர் திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர். மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை வடிவேலு விலைக்கு வாங்கி இருந்தார். நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் வழங்கியது போக நான்கு வழிச்சாலையின் இருபுறமும் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டியுள்ளது. இதனால் நிலம் மாசுபடுவதாக பல முறை வடிவேலுவின் உதவியாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் செயல் அலுவலர் சங்கர்கணேசிடம் புகார் அளித்துள்ளனர்.
உதவியாளர்கள் கூறுகையில், குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை வலியுறுத்தியும் மீண்டும் மீண்டும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அகற்றவும் மறுக்கின்றனர், என்றனர். இதறகு திமுகவின் சொம்புக்கே இந்த நிலமையா என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
No comments