• Breaking News

    எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..... பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த இபிஎஸ்..?

     


    சேலத்தில் நடைபெற்ற அதிமுக கட்சியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கு திமுக மட்டும் தான் எதிரி. வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. வாக்குகள் சிதறாமல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். 

    பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்வியை இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு என்னிடம் கேளுங்கள் என்றார். அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பதில் சொல்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    ஏற்கனவே பாஜக உடனான கூட்டணி பற்றி மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தி வருகிறார். அதே சமயத்தில் அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் எந்த நேரத்திலும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்கிறார். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் கூட்டணி குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்று ஏற்கனவே ஒரு முறை எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ஆறு மாதங்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளதால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    No comments