• Breaking News

    அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசல்.? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

     


    தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஒப்பந்தத்தின்படி நாடாளுமன்ற எம்பி சீட் தங்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அப்படி ஒரு வாக்குறுதியை அதிமுக கொடுக்கவில்லை எனவும், தேவையில்லாத கருத்துக்களை பேச வேண்டாம் எனவும் கூறினார். அவர் தேமுதிக கட்சிக்கு நாடாளுமன்ற எம்பி சீட் ஒதுக்க முடியாது என்று கூறிய நிலையில், அது தேமுதிகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதாவது அதிமுகவுடன் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்று அவர்கள் கேட்டனர். ஆனால் அதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மேலும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும். திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வரும் நிலையில் ஒருவேளை தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் தற்போது அதனை பிரேமலதா விஜயகாந்த் மறுத்துவிட்டார்.

    No comments