• Breaking News

    கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டிட வேண்டும்..... உயர்கல்வித்துறை அமைச்சரிடம் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை.....


    கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டிட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சரிடம்,திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,மேல சொக்கம்பட்டி திரிகூடபுரம் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன்  கொடுத்து மனுவில் அடிப்படையில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூரில் கடந்த 2018ம்ஆண்டுக்கு முன்பு மனோ கல்லூரியாக செயல்பட்டு வந்த கல்லூரி தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக  அறிவிக்கப்பட்டு செயல்பட்டு இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு தேவையாக கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரிக்கு சுற்றுச் சுவர் கட்டுவதற்கும், சாலை அமைப்பதற்கும் நிதி ஒதுக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது .

    தற்போது இக்கல்லூரிக்கு கலைஞர்; நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் பெயர் வைத்திட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்திலும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டிட நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    No comments