சென்னையை அடுத்த தாம்பரத்தில் சிந்தனைக் கூடம் ஒருங்கிணைத்த முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் சிந்தனைக் கூடம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் தாம்பரம் துரை மணிவண்ணன் தலைமை தாங்கினார். வரவேற்பு தாம்பரம் சுப்பிரமணி, நிகழ்ச்சி தொகுப்பாளர் முனைவர் அ.தும்மா பிரான்சிஸ், வேலுமணி, அறிவுடைநம்பி, அழகப்பராசு, ராஜன் மணி, ராமாநுஜம், இளங்கோவன், இளவேனில், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சொற்பொழிவாளர்களாக மறுமலர்ச்சி தி.மு.க.பொருளாளர் திராவிட முரசு மு.செந்திலதிபன், சூலூர் பாவேந்தர் பேரவையின் நிறுவனர் புலவர் செந்தலை ந.கவுதமன், மக்கள் மாமன்ற தலைவர் தோழர் ஆணை பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிறைவு 100, சுயமரியாதை இயக்கம் 100, பெரியாரியப் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து 100, என்ன மூன்று தலைப்புகளில் கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், தி.க மாவட்ட தலைவர் பா.முத்தையன், விசிக மாவட்ட செயலாளர் பொறியாளர் பா.சாமுவேல் எபினேசர், மமக மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன், சி.பி.ம் தொகுதி செயலாளர் தா.கிருஷ்ணன், சிந்தனைக் கூடம் நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
இறுதியில் முனைவர் பெ.அண்ணாதுரை அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
0 Comments