• Breaking News

    திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்..... ஒருவர் கைது


    சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த முத்து நகர் விரைவு ரயிலில்  திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போதை பொருட்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த ரயிலில் மதுரையைச் சேர்ந்த அண்ணாதுரை (56) என்பவர்  பாண்டிச்சேரியில் இருந்து 44 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் அண்ணாதுரையை கைது செய்து பின்னர் திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும் திருக்குறள் விரைவு ரயில் வண்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.



    No comments