• Breaking News

    கல்லிடைக்குறிச்சி-புளியங்குடி பேருந்தினை மீண்டும் இயக்கிட வேண்டும்..... போக்குவரத்து துறை அமைச்சரிடம் சிவபத்மநாதன் கோரிக்கை


    50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கல்லிடைக்குறிச்சி-புளியங்குடி பேருந்தினை மீண்டும் இயக்கிட வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநா த  ன், பெருந்தலைவர் காமராஜர் எம்ஜிஆர் தொண்டு நிறுவன தலைவர் மயிலப்பபுரம் செல்வின் தன்னிடம் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து மனு வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி இருந்து புளியங்குடி வரை தடம் எண் 113 பி என்ற அரசு பேருந்து  சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்தினை வழித்தட ஊர்களான அம்பாசமுத்திரம் விகேபுரம், டானா, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி,கடையம், நரையப்பபுரம், கட்டேறிபட்டி, புங்கம்பட்டி, மயிலப்பபுரம், ஆவுடையானூர், பாவூர்சத்திரம், கீழப்பாவூர்,சுரண்டை, சாம்பவர்வடகரை , ஆய்க்குடி, கடையநல்லூர் வழியாக சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு குறு கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பேருந்தினை பயன்படுத்தி வந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்த இப்பேருந்தினை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    அப்போது தென்காசி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் சீனித்துரை, ஜெயக்குமார்,  பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம்துரை, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்தியராஜ், ஹரிகிருஷ்ணன் உடனிருந்தனர்.

    No comments