மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் முதல்வர் பிறந்த தின விழா திமுக பொதுக்கூட்டம்..... மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்த தின விழா திமுக பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, தமிழ்செல்வன், பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி,சேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அருள், தமிழ்செல்வி, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்அறிவழகன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர் வரவேற்றார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் தொகுப்புரை ஆற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, முன்னாள் எம்.பி. விஜிலா சந்தியானந்த், மாநில பேச்சாளர்கள் ஆரணி மாலா, குடியாத்தம் புவியரசு ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ஜெயக்குமார், சிவன்பாண்டியன், மகேஷ்மாயவன், செல்லத்துரை, அன்பழகன், நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேசன், கணேசன், பேரூர் செயலாளர்கள் சுடலை, நெல்சன், லட்சுமணன், பண்டாரம், முத்து, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ரஜப்பாத்திமா, வைத்தீஸ்வரி, மல்லிகா, சுசீலா, சரஸ்வதி, சுந்தரி, கற்பகசெல்வி, மாரியம்மாள், ராசாத்தி,ஷாலி மேரி, ஹபீப்நிஷா, பாண்டிராணி, ராஜேஸ்வரி, மாரிசெல்வி, சபர் நிஷா, விமலாராணி, மாரிசெல்வி, சிவசண்முக ஞான லட்சுமி, கலாநிதி, சமுத்திரகனி, தனலட்சுமி, ஷோபனாராணி, மல்லிகா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நகரச் சிறந்த நிர்வாகிகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காப்போம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
No comments